Home / Sports / இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!

பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் ” தனக்கு மின்னஞசல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக FIR பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் அப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *