ஐரோப்பிய 8 நாடுகளில் ஒரே டோனரின் விந்தணு தானத்தால் பிறந்த 67 குழந்தைகளில் TP53 மரபணு மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் லுகேமியா, லிம்போமா போன்ற புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டனர். 2008ல் இந்த தானம் செய்யப்பட்டபோது, TP53 மரபணுவின் புற்றுநோய் தொடர்பு அறியப்படவில்லை என ஐரோப்பிய விந்தணு வங்கி தெரிவித்தது.
இரு குடும்பங்கள் குழந்தைகளில் புற்றுநோய் அறிகுறைகளை கண்டறிந்து மருத்துவமனைகளை அணுகியதால் இந்த விபரம் வெளியானது. ஒரு டோனரின் விந்தணு பயன்பாட்டு வரம்பை மீறியதும் தெரியவந்துள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகளை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைக்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.