சுற்றுலா விசா காலாவதியாகி தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் அடங்கிய குழுவை, நேற்று சீதுவவில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்திய குடிவரவு மற்றும் aகுடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 30 நாள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இந்த குழுவினர், சட்டவிரோதமாக அனுமதித்த காலத்தை விட மேலதிகமாக தங்கி உள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக அந்தக் குழுவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன