அம்பாறை, பதியதலாவ காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒரு காவல் அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் காவல் நிலையத்தின் பாதுகாப்புச் சாவடிக்குள் காவல் அதிகாரி இறந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர் பிபிலையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.