இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக தூண்டுதலாக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் 22ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான “தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்” பொறுப்பை ஏற்றது.
இதையடுத்து, NIA விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், டேன் நியூஸ், சமா டிவி உள்ளிட்ட சேனல்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.