Tuesday, October 14, 2025
Google search engine
Homeசினிமாஒஸ்கார் விருது – புதிய விதிமுறை வெளியானது!

ஒஸ்கார் விருது – புதிய விதிமுறை வெளியானது!

திரையுலகில் தலைசிறந்த விருதாக ஒஸ்கார் விருது காணப்படுகின்றது. இவ்விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த ஒஸ்கார் விருதினைப் பெறுவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள 98 ஆவது ஒஸ்கர் விருது விழா தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது ஒஸ்கார் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகத் தேர்வு குழுவில் உள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாகப் பார்க்க வேண்டும் எனவும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விருதுக்கான பரிந்துரைகள் அடுத்த வருடம் ஜனவரி 22ம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments