Tuesday, October 14, 2025
Google search engine
Homeதொழில்நுட்பம்மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவியல் உலகில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த சாதனையை படைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘குறித்த நிறத்தினை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த நிறத்தினைப் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நிறத்திற்கு ஓலோ (Olo) என பெயரிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லேசர் உதவி மூலம் குறித்த நிறத்தனைப் பார்த்தவர்கள் நீலம்-பச்சை கலந்த நிறத்தில் அந்த நிறம் இருந்ததாகவும், ஆனால் வழக்கமான நீலம் பச்சை நிறத்தை போல் அல்லாமல் அது வித்தியாசமாக இருந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments