Home / Local / டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டார்.

வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இரவு 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *