Home / International / கனேடிய நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

கனேடிய நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

நடந்து முடிந்த கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இரு தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கரி ஆனந்த சங்கரி மற்றும் ஜுனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையில் இருந்தே முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை வகித்ததுடன், இறுதியில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், லிபரல் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ – கில்ட்வுட்டில் ( Scarborough – Guildwood) போட்டியிட்ட கரி ஆனந்த சங்கரி அங்கு முன்னிலை பெற்றுள்ளார்.

இதன்படி, அவர் அங்கு 34,941 வாக்குகளைப் பெற்றுள்ளதாக கனேடிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், பிக்கெர்லின் – புருக்லிவ் தொகுதியில் போட்டியிட்ட ஜுனிதா நாதன் 24,951 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

இந்தநிலையில், லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *