(3) பொதுவாக ஓதுதல்
ஓதுதல் என்பது பொதுவாக எமது சமூகத்துக்கு பழக்கப்பட்ட ஓர் அழகிய சொல் இது.
ஓதியே பழக்கப்பட்ட சமூகம் எமது சமூகம்.
திருமறையை ஓதுதல் என்று தான் சொல்வார்கள்.
இதனை நாங்கள் படித்தல், ஆராய்தல் என்றால் எமது சமூகத்தில் பலர் கோபம் கொள்வார்கள்.
நபிகளாரின் ஹதீஸ்களை ஓதுதல்
மௌலிது ஓதுதல்
ராதிபு ஓதுதல்
பொன் புத்தி மாலை ஓதுதல்.
புஹாரி ஓதுதல்
முஸ்லிம் கிரந்தத்தை ஓதுதல்
திருமதி ஓதி கந்தூரி கொடுத்தல்.
சூரா அல்யாஸீனை ஓதுதல்
சூறா அல்கஹ்பை வெள்ளிக்கிழமை நாட்களில் ஓதுதல்
பாத்திஹா ஓதுதல்
இதனால்தான் திருமறையை படிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் ஹாபிழ் ஆக மாற்றி இலகுவாக சுவனம் போக முயற்சி செய்தல்.
எனது மூத்த மகன் டொக்டருக்குப் படிக்கிறான். கடைசி மகன் மத்ரஸாவில் ஓதுகிறான்.
டாக்டருக்கு படித்த மகனுக்கு நல்ல கிராக்கி கிடைக்கிறது.
மௌலவிக்கு ஓதிய மகனுக்கு தொழில் பெற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் பரவாயில்லை.
மௌலவி மகனின் வாழ்க்கை ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறது.
இரண்டு பெரு நாட்களிலும் ஹதியாக்கள் வந்து சேரும். மாஷா அல்லாஹ்.
ஓதியவனுக்கு கொஞ்சம் மரியாதை குறைவு. படிப்பு கொஞ்சம் ஏறுவதில்லை அதனால் கடைசி மகனை ஓத அனுப்பினேன் என்று சொல்லும் பெற்றோர்.
இந்தப் பின்னணியில் ரமழான் மாதத்தில் எல்லாவற்றையும் ஓதுவதற்கு தயாராகிறோம்.
வழமையாக ஓதுகின்ற பழக்கத்தை கொஞ்சம் கூட்டிக் கொள்வது ரமழானை உயிர்ப்பிப்பதாகும்.
இவ்வாறு சிந்திக்கும் நிலை தொடர்கிறது என்றால் மாற்றங்கள் எதுவும் இந்த ரமழானில் நடைபெறாது என்பதில் சந்தேகம் இல்லை.
தொடரும்.....
0 Comments