புனிதமிகு ரமழானை வரவேற்றல் -2



புனிதமிகு ரமழானை வரவேற்றல் -2

(1) ஒவ்வொரு பள்ளிவாயலிலும் கஞ்சி கொடுக்கும் தனவந்தர்களை இனங்காணல், அவர்களை உள்ளடக்கிய பெயர்ப் பட்டியல் ஒன்றைத் தயாரித்தல்.

முழுக் கஞ்சி 
அரைக்கஞ்சி 
கால் கஞ்சி

என்று பிரித்து வசூலில் இறங்குவதற்கான திட்டமிடல் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்..

பட்டினி கிடந்த வயிற்றுக்கு கஞ்சி நல்ல சுகம். 

எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க முடியும் ஆனால் பெரும் கிடாரத்திலே காய்ச்சிய கஞ்சி தனியான ருசிதான், இந்த ருசியை இலகுவில் வாங்க முடியாது.

பெற்றிஸ், கட்லட், சம்ஸா என்று இந்த வகையான உணவுகளை விலை எதுவும் பார்க்காமல் வாங்கி கஞ்சை மாத்திரம் பள்ளியில் எதிர்பார்க்கும் அழகிய கலாச்சாரம்.

இப்படி பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

வீட்டில் நல்ல கோழியும் இறைச்சியும் போட்டு காய்ச்சும் கஞ்சி ருசிதான் ஆனால் இது சற்று சிரமம். 

பள்ளிக்கஞ்சி இன்று நோன்பாளிகளின் உள்ளத்தில் பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறது

இதன் காரணமாக பள்ளிவாயல்களில் கொள்ளிகள் நிறைந்த வழியும்.

இது உண்மையில் கண்கொள்ளாக் காட்சி. 

ரமழான் வசந்தத்தில் இதுவும் ஒரு வசந்தம்.

சின்னஞ்சிறுசுகள் வாளிகளோடு வந்து நின்று அஸர் தொழுகைக்கு செல்லும் போது வரிசை வரிசையாக அடிபிடிப்பட்டுக் கொண்டு நிற்கின்ற தருணம் ரமழானின் வசந்தம்.

முஅந்தினுக்கு இபாதத் செய்ய முடியாமல் தடுக்கும் ஒரு வேலையாகவும் இது சுமத்தப்படும். 

பள்ளியில் இருந்து சீட்டுக்கிழிந்து விடும் என்று கருதியும் சின்னதொரு தொகை இம்மாத சம்பளத்தில் கூடும் என்று கருதியும் அவர் நொந்து கொண்டு ஏற்றுக் கொண்டிருப்பார். 

ஊரில் உள்ள இளைஞர்கள் பலர் இதில் கலந்துகொண்டு நோன்பாளிகளுக்கு கஞ்சி கொடுத்தல் நன்மை என்ற கருதி ஈடுபடுவார்கள். 

இப்படி செய்வது ரமழானின் உயிரோட்டத்தைக் கூட்டுவதாகும் என்று நினைக்கிறார்கள்.

இந்த வசூலுக்கு பின்னால் இருக்கும் நல்ல நோக்கம் பள்ளிவாயிலுக்கு பணம் வசூலித்தல் என்பதாகும். 

நோன்பு வந்து விட்டால் செலவுகள் குறையும் என்று நாங்கள் நினைப்போம் ஆனால் இந்த மாதத்தில் தான் செலவுகள் அதிகம். 

(1) கஞ்சிக்கான வசூல் 
(2) இமாமுக்கான வசூல் 
(3) முஅத்தினுக்கான வசூல் 
(4) பள்ளிக்கான வசூல் 

இந்த மாதத்தில் கடுமையாக கஷ்டப்பட்டு தொழுவிக்கும் இமாமுக்கும் பள்ளியை அடிக்கடி துப்புரவு செய்து கொண்டு கஷ்டப்படும் முஅத்தினுக்கும் என்று வசூலித்தால் நல்லது என்று அபிப்பிராயப்படுகின்ற பலர் இருக்கிறார்கள். 

இந்த அபிப்பிராயம் நியாயம்தான்.

தொடரும்......

Post a Comment

0 Comments