எரிபொருளில் கமிஷன் எடுக்கப்படுவதாக நாங்கள் சொல்லவில்லை : NPP அமைச்சர்

எரிபொருள் விலையில் இருந்து கமிஷன் எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க முற்றிலும் மறுத்துள்ளார். 

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 162 ரூபா கமிஷன் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்குள் செல்லும் என ஜனாதிபதியோ அல்லது அரசாங்கத்தில் உள்ள எவரும் கூறவில்லை என தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 102 ரூபா வரி விதிக்கப்பட்டு, திறைசேரிக்கு கடனாக 50 ரூபா குறைக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இந்த கடன் தொகையும் சேர்த்தே எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், கடந்த முறையும் இதே முறையிலேயே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#எரிபொருள் #கமிஷன் #வசந்தசமரசிங்க #அரசாங்கம் #வரவுசெலவுத்திட்டம்

Post a Comment

0 Comments