மீன் கழிவுகளை வீசி வந்தவருக்கு பொதுமக்கள் செய்த காரியம்!



கம்பளை: கம்பளை பிரதேசத்தில் மீன் விற்பனை நிலையம் நடத்தி வரும் ஒருவர், தினமும் தனது கடையின் கழிவுகளை வீதியோரத்தில் வீசி எறிந்து வந்ததால் பொதுமக்கள் நேற்று அவருக்கு தனித்துவமான முறையில் தண்டனை வழங்கியுள்ளனர்.

இந்த வியாபாரி தினமும் தனது கடையின் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி வந்ததால் பொதுமக்கள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். 

இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் நேற்று முன்கூட்டியே திட்டமிட்டு இந்த வியாபாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு நிறுத்தினர். 

பின்னர் அவர் வீதியோரத்தில் கொட்டிய மீன் கழிவுகளை எடுத்து அவரது வாகனத்துக்குள்ளேயே கொட்டி தண்டனை வழங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அந்த வியாபாரியையும் அவரது உதவியாளரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பேச்சுக்களை ஏற்படுத்தியுள்ளது. 

சிலர் பொதுமக்களின் இந்த செயலை ஆதரித்துள்ளனர். அதே சமயம் சிலர் இது தவறான செயல் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

#கம்பளை #மீன்வியாபாரி #பொதுமக்கள் #தண்டனை #சுற்றுப்புறச்சூழல்

Post a Comment

0 Comments