இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு அமலாக உள்ளது. வீட்டுப் பயன்பாடு முதல் தொழில் துறை வரை அனைத்து பிரிவினருக்கும் இந்த குறைப்பு பொருந்தும்.
* வீட்டுப் பயன்பாடு: 0-30 அலகுகளுக்கு 29% வரை, 31-60 அலகுகளுக்கு 28% வரை, அதிகபட்சமாக 180 அலகுகளுக்கு மேல் 19% வரை குறைப்பு.
* பொதுத் தேவை: 12% குறைப்பு.
* அரச நிறுவனங்கள்: 11% குறைப்பு.
* ஹோட்டல் துறை: 31% குறைப்பு.
* வழிபாட்டுத்தலங்கள்: 21% குறைப்பு.
* தொழிற்துறை: 30% குறைப்பு.
* வீதி விளக்குகள்: 11% குறைப்பு.
* மொத்தக் குறைப்பு: 20%
இந்த புதிய கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.
இந்த குறைப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரத்திற்கும் ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
#மின்கட்டணக்குறைப்பு #இலங்கை #பொதுபயன்பாடுகள்ஆணைக்குழு
0 Comments