தற்போதைய விலையை விட குறைவாக
வருகிற ஆண்டு இலங்கையில் Toyota வாகனங்கள் மீண்டும் கிடைக்க உள்ள நிலையில், டொயோட்டா லங்கா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை அறிவித்துள்ளது.
இந்த விலை தற்போது பழைய வாகனங்களை மினுக்கி விற்கும் விற்கும் விலையை விட பல மடங்கு குறைவு என அவதானிக்க முடிகிறது.
இலங்கையில் வாகன இறக்குமதி தொடங்கவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், விரைவில் இந்தத் தடை நீக்கப்பட்டு வாகன இறக்குமதி தொடங்கவுள்ளது.
இதன் காரணமாக, புதிய Toyota மாடல்கள் இலங்கை சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் பெரும் தாக்கம்
Toyota வாகனங்களின் விலை குறைப்பு, இலங்கையின் வாகன சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.
0 Comments