SLMC, SJB இடையே உறவு நீடிக்கும் - ரவூப் ஹக்கீம்


கொழும்பு: ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) இடையே தேசியப் பட்டியல்  தொடர்பான முருகல் அதிகரித்துள்ளது. 

SLMC தலைவர் ரவூப் ஹக்கீம், SJB-யின் தேசியப் பட்டியலில் தங்களது செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என வாதிட்டு, நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹக்கீம், "இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, SLMC-க்கு ஒரு தேசியப் பட்டியல் இடம் ஒதுக்கப்பட வேண்டும். எனவேதான் நீதிமன்றம் சென்றோம். இது இரு கட்சிகளுக்கு இடையிலான உறவை பாதிக்காது" என தெரிவித்தார்.

 இறுதியாக, SJB தரப்பு, நிசாம் காரியப்பரின் பெயர் சேர்க்கப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளது.

#SLMC #SJB #தேர்தல் #நீதிமன்றம் #இலங்கை

Post a Comment

0 Comments