ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தேசிய பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்ட நீதிமன்றம், SLMC செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிசாம் காரியப்பரின் பெயரை விடுத்து பட்டியலை அனுப்ப முடியாது என தீர்ப்பளித்தது.
இதையடுத்து SJB கட்சி, மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் ஆகியோரின் பெயர்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.
#SJB #தேசியபட்டியல் #தேர்தல் #நீதிமன்றம் #SLMC
0 Comments