NPP சரியான பாதையிலேயே பயணிக்கிறது - ரணில் புகழாரம்

இந்தியா 2040ஆம் ஆண்டளவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் மூலம் இலங்கைக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற அடால் பிஹாரி வாஜ்பேயின் ஜனன தின நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற சமீபத்திய கலந்துரையாடலை பாராட்டினார். 

இது தேசிய மக்கள் சக்தி (NPP) உரிய பாதையில் பயணிப்பதற்கான சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை கடந்திருப்பது போல, பிராந்திய அளவில் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என ரணில் நம்பிக்கை தெரிவித்தார்.

#ரணில் #இந்தியா #இலங்கை #பொருளாதாரம் #தேசியமக்கள்சக்தி

Post a Comment

0 Comments