ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவம், சபாநாயகர் அசோக ரன்வலவு கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, ஆளுங்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை முன்பள்ளி என விமர்சித்த தேசிய மக்கள் சக்தி, அதனைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குப் போலி பட்டம் பெற்றவர்களை கொண்டு நிரப்பியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், சபாநாயகர் மீது அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வருவது குறித்து அடுத்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடவுள்ளதாக பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#ஸ்ரீலங்கா #பட்டச்சர்ச்சை #அவநம்பிக்கைபிரேரணை
0 Comments