மோசடி விவகாரம்: CIDக்கு விரைந்த NPP அமைச்சர்!


கொழும்பு: கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் பணம் சேகரிக்கும் மோசடி நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இது குறித்து முறைப்பாடு செய்த அமைச்சர், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி நடைபெறுவதாக தெரிவித்தார்.

மோசடி செய்பவர்கள், அமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பணம் கேட்டு வருவதாக அவர் கூறினார்.

"நானோ அல்லது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ இவ்வாறு பணம் கேட்பதில்லை. இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாற வேண்டாம்" என அமைச்சர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments