இலங்கை : செவனகல பகுதியில் நடந்த அதிரடி சோதனையில் கீழ் தளத்தில் பெட்ரோல் பங்கும், மேல் தளத்தில் 5000 கஞ்சா செடிகளும் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றது.
மொட்டை மாடியில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை முற்றுகையிட்டனர்.
சோதனையில், கீழ் தளத்தில் ஒரு பெட்ரோல் பங்கும், முதல் தளத்தில் ஒரு குடியிருப்பு வீடு மற்றும் மொட்டை மாடியில் 5000 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக செவனகலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#இலங்கை #கஞ்சா #கைது
0 Comments