வியட்நாம்: திருமண வயதை எட்டிய பெண்களுக்கு திருமண அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், வியட்நாமில் ஒரு புதிய நடைமுறை பரவி வருகிறது.
திருமணத்தை தள்ளிப்போட விரும்பும் பெண்கள், தற்காலிகமாக காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையே இது.
வடக்கு வியட்நாமில் ஒரு பெண், தனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து, பல பெண்கள் இந்த வழியை பின்பற்றத் தொடங்கினர்.
வாடகைக்குச் செல்லும் ஆண்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்கின்றனர். இதில் உடற்பயிற்சி, சமையல், பாடல், உரையாடல் போன்றவை அடங்கும்.
இந்த நடைமுறை, சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
#வியட்நாம் #வாடகைக்காதலர்கள் #சமூகப்பிரச்சனை
0 Comments