இலங்கையில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு இறுதி முடிவு ஜனவரி 17 ஆம் திகதி வெளியாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
முக்கிய குறிப்புகள்:
* பொதுமக்களின் கருத்து கேட்கும் காலம்: ஜனவரி 8 வரை
* வாய்மொழி கருத்து: ஒவ்வொரு மாகாணத்திலும் டிசம்பர் 27 முதல் ஜனவரி 10 வரை அமர்வுகள் நடைபெறும்.
* மின்னஞ்சல் மூலம்: info@pucsl.gov.lk
* வாட்ஸ்அப் 076 427 1030 க்கு அனுப்பலாம்
* தபால் மூலம் : இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, 6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3 என்ற முகவரிக்கு அறிவிக்க முடியும்.
* இறுதி முடிவு: ஜனவரி 17
ஏன் பொதுமக்கள் கருத்து:
மின் கட்டண உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், அவர்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுப்பதற்கு ஆனைகுழு சந்தர்ப்பம் வழங்குகிறது.
தவறாதீர்கள்!
இந்த முடிவு உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், உங்களது கருத்தை தெரிவிக்க தவறாதீர்கள்.
#மின்கட்டணம் #இலங்கை #பொதுமக்கள் #கருத்து
0 Comments