ஈரான் அரசு, பெண்களுக்கு எதிரான மிகவும் சர்ச்சைக்குரிய ஹிஜாப் மற்றும் கற்பு சட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமலுக்கு வரவிருந்த இந்த சட்டத்திற்கு உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் என்ன இருந்தது?
இந்த சட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் தலைமுடி, முன்கைகள் மற்றும் கீழ் கால்களை முழுமையாக மறைக்கத் தவறினால் அபராதம் மற்றும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்தது.
இந்த கடுமையான தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஏன் இடைநிறுத்தம்?
ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன், இந்த சட்டம் தெளிவற்ற நிலையில் இருப்பதாகக் கூறி, அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றார்.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஹிஜாப் விவகாரத்தில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டேன் என்று அவர் உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments