கச்சத்தீவை கைப்பற்றுவதே மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு - தி.மு.க



சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் போது மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், இதுவரை எந்தவித நடைமுறை நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலைக்குரியது என தி.மு.க. தெரிவித்துள்ளது. 

இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்படுவதாகவும் கட்சி கருதுகிறது.
தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மிகுந்த துன்பத்தில் உள்ளனர். 

இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையே நிலவும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments