பாதாள குழுக்களின் மீள் எழுச்சி: அரசின் நிலைப்பாடு?

பாதாள உலகம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதனை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், பாதுகாப்புப் படையினர் இது தொடர்பாக திட்டமிட்ட வகையில் தலையீடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

"பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவை. பாதுகாப்புப் படையினர் இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக எடுத்து வருகின்றனர். விரைவில் அதன் முடிவுகள் தெரியவரும்" என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

#பாதாளஉலகம் #போதைப்பொருள் #அரசுநடவடிக்கை #பாதுகாப்புப்படை

Post a Comment

0 Comments