விண்கல் பூமியில் விழுந்து தீப்பிழம்பாக மாறிய சம்பவம் !


யாகுடியாவில் அதிசய நிகழ்வு: 

சமீபத்தில் ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் விண்கல் ஒன்று விழுந்து தீப்பிழம்பாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?: 

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரிய மண்டலத்தைச் சுற்றி வந்த 70 சென்ரிமீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் புவி வட்டப் பாதைக்குள் நுழைந்து, பின்னர் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் பல துண்டுகளாக உடைந்து தீப்பிழம்பாக மாறியுள்ளது.

வனப்பகுதியில் தீப்பிழம்புகள்: 

இந்த அதிசய நிகழ்வு அங்குள்ள காட்டுப் பகுதியில் தீப்பிழம்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அதிர்ச்சியில் பொதுமக்கள்: 

இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுள்ளனர். விண்கல் விழுந்த பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இது அறிவியல் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments