ஊடகங்கள் அரசின் பங்குதாரர்கள் - ஜனாபதி அநுரகுமார திசாநாயக்க



இலங்கையின் ஜனாபதி அநுரகுமார திசாநாயக்க, இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில், ஊடகங்களை அரசின் வெளிநபர்களாக அல்ல, மாறாக சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்புவதில் பங்குதாரர்களாக கருதுவதாக தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

ஊடக சுதந்திரத்தை மதிக்கும் அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும் பொய்யான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில், ஜனாபதி திசாநாயக்க, தற்போது நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். 

குறிப்பாக, வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

#ஜனாபதி #ஊடகங்கள் #பங்குதாரர்கள் #இலங்கை

Post a Comment

0 Comments