முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர கண்டனம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்த அரசின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவும், மஹிந்தவின் பாதுகாப்பு குறித்த அதிகப்படியான பேச்சுக்கள் தேவையற்றவை என்றும் கூறினார்.
மஹிந்தவின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட இராணுவ வீரர்கள் தனது தோட்டம் மற்றும் நாய் பராமரிப்பில் ஈடுபட்டிருந்தது குறித்தும் தேவானந்த குறிப்பிட்டார்.
"உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பை நடத்தியவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் பற்றி பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments