டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தற்போது இணைய உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது சொந்த மின்னஞ்சல் சேவையான 'எக்ஸ் மெயில்'ஐ விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இது, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் ஜிமெயிலுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஸ்க் ஏற்கனவே டுவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கி அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது எக்ஸ் பிராண்டை மேலும் விரிவுபடுத்தும் விதமாக இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
அண்மையில் வெளியான தகவலின்படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
இது உலகிலேயே மிக அதிக சொத்து மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
#எலான்மஸ்க் #எக்ஸ்மெயில் #ஜிமெயில் #தொழில்நுட்பம்
0 Comments