கலால் உரிமம் நிறுத்தம்: ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

கொழும்பு: நாட்டில் மதுபான உரிமம் வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க வரிக் கட்டணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு : "கலால்" என்பது பொதுவாக மதுபானம் தயாரிப்பு அல்லது அதன் மீது விதிக்கப்படும் வரி அல்லது மதுபானம் அனுமதி பத்திரங்கள் தொடர்புடையது. 

"ஹலால்" என்பது இஸ்லாம் மதத்தில் அனுமதிக்கப்பட்ட, தூய்மையான மற்றும் சட்டபூர்வமான என்று கருதப்படும்.

#மதுபானஉரிமம் #ஜனாதிபதியுத்தரவு #இலங்கை

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

Post a Comment

0 Comments