கொழும்பு: வரும் பண்டிகை சீசனை முன்னிட்டு இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய், மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த சில வாரங்களில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை தற்போது 240-260 ரூபாயாகவும், தேங்காய் ஒன்று 220-240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்த விலை உயர்வு காரணமாக பண்டிகைக் காலத்தில் தங்களால் வழக்கமாக செய்யும் செலவுகளைச் செய்ய முடியாமல் போவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
0 Comments