கொழும்பு: இலங்கை விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யா, இலங்கைக்கு 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைடு உரத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த உரம், ரஷ்யாவின் Uralchem குழுமத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த இலவச உரம், நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த, இந்த உரம் விரைவில் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த உதவி, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான நட்புறவு உறவின் ஒரு அடையாளமாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#இலங்கை #ரஷ்யா #உரம் #விவசாயம் #உதவி
0 Comments