கொட்டாவையில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்று இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மாற்றுப்பாதை அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 62 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஐவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கு காரணம் வேனின் சாரதி உறங்கியதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#அதிவேகநெடுஞ்சாலை #விபத்து #கொட்டாவை #காலி #கராப்பிட்டிய
0 Comments