கொடிகாமம் - மிருசுவில்: வாகன விபத்தில் மூவர் காயம்



இன்று அதிகாலை கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, மரப்பலகைகளை ஏற்றிய உழவு வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் உழவு வண்டியின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் பேருந்தின் நடத்துனர் ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து கொடிகாமம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments