யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பிலான சட்டத்தரணி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சத்தியமூர்த்தி, அர்ச்சுனா இராமநாதன் மீது 100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது தனக்கு நிகழ்ந்த விடயங்கள் குறித்து அர்ச்சுனா அவதூறு பரப்பியதாகவும், கடந்த 9 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முகநூலில் அவதூறு செய்திகள் பரப்பியதாகவும் சத்தியமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அர்ச்சுனா சார்பிலான சட்டத்தரணி தனது வாதிடலில், அர்ச்சுனா கூறிய அனைத்தும் உண்மை எனவும், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#யாழ்ப்பாணம் #போதனா_வைத்தியசாலை #அர்ச்சுனா_இராமநாதன் #சத்தியமூர்த்தி #வழக்கு
0 Comments