ஈஸ்டர் தாக்குதல்: புதிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாக சாணக்கியன் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் தனது வசமிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை நினைவுகூறிய அவர், இந்தத் தாக்குதலுக்கான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் மீது இருப்பதாகக் குறிப்பிட்டார். 

மேலும், பிள்ளையான் மீதான விசாரணை போதாது என்றும், இன்னும் பலர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தனது வசம் இருக்கும் கூடுதல் தகவல்களை பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவித்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் ஒரு குழுவை அமைத்து இந்த விவகாரத்தை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


#ஈஸ்டர்தாக்குதல் #சாணக்கியன் #விசாரணை #பாராளுமன்றம்

Post a Comment

0 Comments