கொழும்பு: ஜனாபதி நம்பிக்கை நிதியத்தில் இருந்து பல கோடி ரூபாய் முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.
2005 முதல் 2024 வரையிலான காலத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், மாணவர்களின் கல்விக்கும் உதவ வேண்டிய இந்த நிதியில் இருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட பட்டியலில், மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்தன 300 இலட்சம் ரூபாயை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இதர முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வறுமை, கல்விக்காகவே நிதியம்:
ஜனாபதி நம்பிக்கை நிதியம் வறுமையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், கல்வியை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த நிதியில் இருந்து பெரும் தொகையை பெற்றுள்ள முன்னாள் அரசியல்வாதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பணம்:
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் களத்தில் பரபரப்பு:
இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
முன்னாள் அரசியல்வாதிகளின் மறுப்பு:
இதுவரை இந்த குற்றச்சாட்டு குறித்து எந்த முன்னாள் அரசியல்வாதியும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.
விசாரணைக்கு கோரிக்கை:
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊழல் முதலைகளின் பெயர் :
2005 முதல் 2024 ஆண்டு வரை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தினால் பலனடைந்தவர்களின் பெயர் பட்டியல்:
*பி. ஹரிசன்
*பியசேன கமகே
*சுமேதா ஜயசேன(இவருக்கு மெனராகலையில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன)
*மனோஜ் சிறிசேன
*பி.தயாரத்ன
*எஸ்.சி. முத்துகுமாரன
*வாசுதேவ நாணயக்கார
*சரத் அமுனுகம
*எஸ்.பி.நாவின்ன
ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தில் நிதியுதவிப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல்
தேடிப்பிடிப்பது சற்று கடினமாகும்.
*குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.பி.டி.பி.கே. ஜயசேகர.
*எச்.எம்.பி.என்.டி.சில்வா / பியல் நிஸாந்த டி சில்வா.
*எஸ்.ஏ.டி.எஸ். பிரேமஜயந்த/சுசில் பிரேமஜயந்த.
*ஈ.ஏ.ஐ.டி.டி.பெரேரா? / இசுறு தேவப்பிரிய பெரேரா.
*எஸ்.ஏ,ஜகத் குமார 10 இலட்சம் ரூபாயை
*கே.பி.எஸ். குமார சிறி, 9 இலட்சத்து 53, 430 ரூபாயை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
*ஜயலத் ஜயவர்த்தன 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.
*நாமல் குணவர்த்தன 10 இலட்சம் ரூபாய்,
*தர்ததாஸ பண்டா 10 இலட்சம் ரூபாய்,
*விதுர விக்ரமநாயக்க 15 இலட்சம் ரூபாய்,
*விமலவீர திஸாநாயக்க 30 இலட்சம் ரூபாய்,
*லக்கி ஜயவர்த்தன 16.2 இலட்சம் ரூபாய்,
*சந்திரசேகரன் 14 இலட்சம் ரூபாய்,
*2014 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாய்,
*ஜோசப் மைக்கல் பெரேரா 27 இலட்சம் ரூபாய்,
*டி.பி. ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாய்
*டபிள்யு.எம்.எஸ்.பொன்சேகா 55 இலட்சம் ரூபாய்,
2022 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் சட்ட ஆலோசகரான ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாய்,
*எலிக் அலுவிகார 22 இலட்சம் ரூபாய்,
*ரஞ்சித் அலுவிகார 8.6 இலட்சம் ரூபாய்.
இந்த அலுவிகார பரம்பரையே ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணத்தில்தான் மருந்து வாங்கியுள்ளார்கள்.
*ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாய்,
*கெஹலிய ரம்புக்வல்ல 110 இலட்சம் ரூபாய்…
*எம்.கே.டி.எஸ். குணவர்த்தன 112 இலட்சம் ரூபாய்,
*ரஞ்சித் சொய்சா 188 இலட்சம் ரூபாய்,
*டி.எம்.ஜயரத்ன 300 இலட்சம் ரூபாய்…( காலம் சென்ற முன்னாள் பிரதமர் )
2022 முதல் 2024 பிரதமர் அலுவலகத்தின் வைத்திய பிரிவின் செலவு 121 இலட்சம் ரூபாய்…( முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் வைத்திய செலவுகள்)
0 Comments