மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்து: மட்டக்களப்பு இளைஞன் பலி


மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் நேற்று (21) இரவு நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாமாங்கம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய R. சுபிஷான் என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த மட்டக்களப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். 

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் கோவிலுக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்புறம் மோதியதால் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments