பயன்படுத்திய வாகன விலைகள் பாரிய வீழ்ச்சி!




அடுத்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதால், நாட்டில் உள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் விரைவில் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி தடையை அரசாங்கம் தளர்த்தியதை அடுத்து, புதிய வாகனங்கள் நாட்டிற்கு அதிகளவில் கொண்டுவரப்படும். 

இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் மதிப்பு குறைந்து, விலைகளில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என சங்கத் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம், வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குறைந்த இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் இதன் மூலம் மிகவும் மலிவாக கிடைக்கும்.

#வாகனவிலை #இறக்குமதி #கொரோனா #வாகனம்


Post a Comment

0 Comments