கோர விபத்து: இரு சிறுமிகள் உயிரிழப்பு!



தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பின்னதுவ பகுதியில் நேற்று(11) இரவு இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், குடும்பத்தின் தாய், தந்தை ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை மற்றும் பாலட்டுவ இடையே பயணித்த கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த குடும்பத்தினர் அனைவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் இரு சிறுமிகளை மீட்க முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#தெற்குஅதிவேகநெடுஞ்சாலை #விபத்து #உயிரிழப்பு #கொட்டாவை #கராப்பிட்டிய

Post a Comment

0 Comments