இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் திரும்பியது: மீண்டும் வரிசையா?

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் ஒன்று திரும்பிச் சென்றதாக வெளியான செய்தி தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில், குறித்த எரிபொருள் கப்பல் தமது நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டதல்ல எனத் தெரிவித்தார். இதனால், இந்த விவகாரத்தில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

கடந்த 2 ஆம் திகதி யுனைட்டட் பெற்றோலிய நிறுவனம் 15,000 மெட்ரிக் டன் பெற்றோல் மற்றும் 15,000 மெட்ரிக் டன் டீசலுடன் இலங்கை வந்திருந்தது. இந்த கப்பலில் உள்ள எரிபொருளை இறக்காமல் திரும்பச் சென்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து பேசிய ஜனக ராஜகருணா, இலங்கையில் எரிபொருள் வர்த்தகம் செய்ய மூன்று நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களில் ஒன்றின் உள் விவகாரம் காரணமாகவே இந்த கப்பல் திரும்பியதாகக் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எரிபொருள் முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#இலங்கை #எரிபொருள் #கப்பல் #பெற்றோலியக்_கூட்டுத்தாபனம்

Post a Comment

0 Comments