முன்னாள் அமைச்சர் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ


கொழும்பு: முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் சமீபத்தில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காணொளியில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அவர் கிளப்பை விட்டு வெளியேறுகையில் கத்திக் கூச்சலிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கிளப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனினும், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை என கறுவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#ஹரின்பெர்னாண்டோ #CHFCகிளப் #சர்ச்சை


Post a Comment

0 Comments