கொழும்பு: ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பான புலனாய்வு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாஜுதீனின் மரணத்திற்கு முன்னர் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் தரவுகள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக பிரதம அமைப்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்னதாக, இந்த தரவுகளை வழங்க மறுத்த டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தாஜுதீனின் மரணம் தொடர்பான விசாரணை, டயலொக் நிறுவனத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் முடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய தடயங்கள் கிடைத்துள்ளதால், குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று சந்தேகத்துக்குரிய வாகன விபத்தில் தாஜுதீன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#தாஜுதீன் #மரணம் #விசாரணை #புதியதடயங்கள் #அரசாங்கம்
இந்த செய்தியை மேலும் விரிவாக அறிய, தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:
NEWSPRO.LK TAMIL
0 Comments