புதுடில்லி: இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை வந்தடைந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றனர். புதுடில்லி நகரின் முக்கிய இடங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இன்று இரவு, ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்துப் பேசுவார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், தொழில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#இலங்கை #இந்தியா #ஜனாதிபதி #வரவேற்பு
0 Comments