அரசாங்கம் சொல்ற விலைக்கெல்லாம் அரிசி விற்க முடியாது - மொத்த விற்பனையாளர்கள்

அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது என மொத்த விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

அதிகரித்த விலைக்குத்தான் தாங்கள் அரிசியை கொள்முதல் செய்ய வேண்டியுள்ளதால், 5 முதல் 10 ரூபாய் இலாபத்தில் அரிசியை விற்பனை செய்ய முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் அரிசி தட்டுப்பாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் அரிசி வர்த்தகத்தை கைவிட நேரிடும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், அரிசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை தினந்தோறும் சேகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

இதன்படி, நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து தினசரி உற்பத்தி விவரங்களை நுகர்வோர் அதிகார சபை சேகரித்து, வர்த்தக அமைச்சருக்கு அளிக்கும்.


#அரிசி #தட்டுப்பாடு #விலைஉயர்வு #மொத்தவிற்பனையாளர்கள் #அரசாங்கம்

Post a Comment

0 Comments