அவதானம் : பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்பு!

வருகின்ற சில நாட்களில் கிழக்கு திசையில் உருவாகும் அலைவடிவிலான தளம்பல் நிலையால் வானிலை மாற்றங்கள் ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், வடகிழ் பருவமழை படிப்படியாக தொடங்கும் நிலையில், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழ் அழுத்தப் பகுதி தமிழ் நாட்டை நோக்கி நகரக்கூடும் என்பதால், வங்காள விரிகுடா மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

#வானிலை #மழை #தமிழ்நாடு #வங்காளவிரிகுடா


Post a Comment

0 Comments