கல்வித் தகுதி ஆதாரங்களுடன் நாடாளுமன்றதில் சஜித்!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது கல்வித் தகுதிகள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்றினார்.

தான் கற்ற கல்வி மற்றும் பெற்ற பட்டங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் உண்மையானவை என்றும், அவற்றில் எவ்வித தவறும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார். 

மேலும், யாரேனும் தனது ஆவணங்களில் தவறு கண்டறிந்தால், எம்.பி பதவியையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் துறந்து அரசியலிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்றும் அறிவித்தார்.

தனது பிறப்புச் சான்றிதழையும் பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்ததாகவும், யாராவது தனது பிறப்பு குறித்து கேள்வி எழுப்பலாம் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

#சஜித்பிரேமதாஸ #கல்வித்தகுதிகள் #பாராளுமன்றம் #ஆவணங்கள்

Post a Comment

0 Comments