யாழில் பைக் - கார் விபத்தில் இளைஞன் பலி!



யாழ்ப்பாணம், மண்கும்பான்: இன்று (20) மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மண்டைதீவைச் சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (21) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதல் விபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#யாழ்ப்பாணம் #விபத்து #உயிரிழப்பு

Post a Comment

0 Comments