சிரியாவில் புரட்சி வெற்றி? பஷார் அல்-அசத் நாட்டை விட்டு தப்பியோட்டம்!



டமாஸ்கஸ்: சிரியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் போராட்டங்கள் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. 

நாட்டின் தலைநகர் டமாஸ்கஸை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை டமாஸ்கஸில் இருந்து பஷார் அல்-அசத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

சிரிய தலைநகரை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக கூறியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

டமாஸ்கஸில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments